Map Graph

பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)

பன்னாட்டு வர்த்தக மையம் என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமான வானளாவி ஆகும். அதாவது ஹொங்கொங்கில் உள்ள உயரமான கட்டடம் இதுவாகும். இதனைச் சுருக்கமாக ஐசிசி கட்டடம் என்றழைப்பர். இந்த வானளாவி தற்போதைக்கு உலகில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ளது. இது 108 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 484மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவுற்றன. இவ்வானளாவி ஹொங்கொங்கில் கவுலூன் தீபகற்பத்தில், மேற்கு கவுலூன் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வானளாவி கட்டப்பட்டதும் ஹொங்கொங்கிலேயே உயரமான வானளாவி இதுவானது.

Read article
படிமம்:International_Commerce_Centre_201008.jpg